Horror Movies Recommendations – Hidden Gems

Horror Movies – Hidden Gems

இந்த திரைப்படத் தொகுப்பில் நல்ல திகில் திரைப்படங்களை பற்றி பார்க்கலாம். இந்த தொகுப்பில் உள்ள திரைப்படங்கள் அவ்வளவாக பிரபலமாகாதவை. ஆனால் என்னைப்பொறுத்தவரை சிறந்த திகில் படங்கள். 

எச்சரிக்கை: 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் இளகிய மனம் படைத்தவர்கள் இந்தப் படங்களைப் பார்ப்பதை தவிர்க்கவும்.

எ கொயட் பிளேஸ் (A quiet place) – 2018

சமீபத்தில் பார்த்த அருமையான திகில் திரைப்படம்.

கதை சுருக்கம்: நாம் கொஞ்சம் சத்தமாக பேசினாலோ அல்லது வேறு ஏதேனும் சத்தம் கேட்டாலும் ஏலியன் போன்ற மிருகம் வந்து கொடுரமாக கொல்கிறது.

எதிர்பாராத விதமாக மகன் மிருகத்தின் இரையாகிறான். அதன் பின்பு மகள் மற்றும் கைக்குழந்தையுடன் உள்ள மனைவியை எப்படி காப்பாற்றுகிறான் என்பதை பற்றிய கதை.

குடும்பம், அப்பா மகள் பாசம் , மிருகத்தின் தாக்குதல் என பர பர பரபரப்புக்கு பஞ்சமில்லாத திரைப்படம்.

IMDB Rating : 7.5/ 10

Watch it in Netflix

டோன்ட் பிரீத் (Don’t Breathe)

கண் பார்வை தெரியாத வயதான பெரியவர்(ஆதார் படத்துல மிலிட்டரி கமாண்டராக நடித்தவர்) வீட்டில் எளிதாக கொள்ளை அடிக்கலாம் என நுழைந்த‌ 3 பேர் அவர் நடத்திய எதிர்பாராத பதில் தாக்குதலில் உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பிக்க போராடும் படம். வித்தியாசமான கதை களம் மற்றும் பரபரப்பான காட்சிகள் நிறைந்த படம்

IMDb Rating 7.1/ 10

Watch it on Prime

ஈடன் லேக் (Eden Lake) – 2008

ஒரு இளம் ஜோடி நகர வாழ்க்கையிலிருந்து நிம்மதியாக வார இறுதியை கழிக்க காடுகளுக்கு நடுவில் இருக்கும் ஒரு ஏரிக்கு வருகின்றனர்.

வந்த இடத்தில் காட்டில் அந்த ஊரை சேர்ந்த குழந்தைகள் குழுவுடன் மோதல் ஏற்படுகிறது.

முதலில் குழந்தைகள் தானே என்று சாதாரணமாக இருக்கிறது இந்த ஜோடி. ஆனால் அந்த கூட்டமே ஒரு சைக்கோ என்றும் அந்த குழுவின் தலைவன் ஒரு மிகப்பெரிய சைக்கோ என்று தெரியவரும்போது தப்பிச் செல்ல முயற்சி செய்கின்றனர்.

இந்த இளம் ஜோடி மற்றும் குழந்தைகள் குழுவிற்கும் நடுவே காட்டுக்குள் நடக்கும் எலி , பூனை விரட்டலே இந்த திரைப்படம்

திரைப்படம் பார்ப்பதற்கு எளிதான திரைப்படம் அல்ல நாயகிக்கு கடைசியில் நேரும் முடிவு மிகவும் கொடூரமானது. ஹாரர் பட விரும்பிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.

IMDb Rating 6.8/10

தி லாஸ்ட் ஹவுஸ் ஆன் தி லெஃப்ட் (The last house on the left) – 2009

அப்பா அம்மா மற்றும் மகள் கொண்ட அழகிய குடும்பம் ஊருக்கு ஒதுக்குப்புறமான தங்களுடைய வீட்டுக்கு மனதை ஆறுதல் படுத்த தங்க செல்கின்றனர்.

மகள் தன்னுடைய தோழியை பார்க்க அருகில் உள்ள ஊருக்குச் சென்றுவிடுகிறார். தோழிகள் இருவரும் ஒரு சைக்கோ கூட்டத்தில் மாட்டிக் கொள்கின்றனர்.

இந்த கொடூரமான சைக்கோ கூட்டம் தோழிகளில் ஒருவரை கொன்று விடுகிறது.

இன்னொருத்தியை கொடூரமாக கற்பழித்து பின் கத்தியால் குத்தி விடுகின்றனர். ஒரு சந்தர்ப்பத்தில் குற்றுயிரும் கொலை உயிருமாக அவர் தப்பித்து விடுகிறார்.

விதியின் வசத்தால் இந்த கூட்டத்தின் கார் பழுதாகி விட வேறு வழியில்லாமல் தங்கள் கற்பழித்து கொல்ல முயற்சி செய்த அந்தப் பெண்ணின் தாய் தந்தையர் இருக்கும் அந்த வீட்டிற்குள் அடைக்கலம் ஆகின்றனர்.

சிறிது நேரத்தில் தாய் தந்தையருக்கு இவர்களை பற்றி தெரிய வருகிறது. தன் மகளை கற்பழித்து கொல்ல முயற்சி செய்த அவர்களை கொடூரமாக பழிவாங்குவது தான் இந்த படத்தின் கதை.

IMDb Rating 6.5/ 10

தி மிட் ஃநைட் மீட் ட்ரெயின் ( The midnight meat train ) – 2008

இந்தத் திரைப்படம் பிரபல திகில் கதை எழுத்தாளர் கிளைவ் பார்க்கர் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.

இரவு நேரத்தில் செல்லும் ஒரு லோக்கல் ட்ரெயினில் பயணிக்கும் டிப்டாப்பாக உடையணிந்த ஒருவன் ஒரு சமயத்தில் அந்தப் பெட்டியில் உள்ள அனைவரையும் கொன்று குவிப்பான். அதுமட்டுமல்லாது அவர்களை கறிக்கடையில் ஆடு மாடுகளை தொங்கவிடுவது போல தொங்க விடுவான்.

படத்தின் ஹீரோ இரவு நேர போட்டோகிராபியில் ஆர்வமுள்ளவர். ஒருசமயம் அந்த டிப்டாப் ஆசாமியின் மீது ஆர்வம் கொண்டு அவனை தொடர்ந்து சென்று அந்த ரயிலில் என்ன நடக்கிறது என்பதை கண்டுபிடிப்பார்.

நான் முதன்முதலில் பார்த்த கொடூரமான திரைப்படம் இது. அதற்குப்பின் பல திரைப்படங்களை இத் திரைப்படத்தை விட கொடூரமாக பார்த்துள்ளேன் ஆனால் இத்திரைப்படம் தந்த அந்த பயத்தை வேறு எந்த திரைப்படமும் தரவில்லை.

ரயில் பெட்டியினுள் அந்த ஆசாமி கொல்லும் காட்சிகள் கொடூரமாக இருக்கும். பெரும்பாலான நேரங்களில் அவன் ஒரு சுத்தியலை வைத்து அடித்துக் கொல்லுவான்‌.

மிகவும் கொடூரமான படம்.

IMDb Rating 6.0/10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Howl – 2013Howl – 2013

Howl Tamil Review  நைட் நேரம் காட்டுக்குள்ள போற ட்ரெயின் ப்ரேக் டவுன் ஆகி நின்னுடுது. திடீர்னு ஏதோ ஒரு மிருகம் பயணிகளை எல்லாம் அட்டாக் பண்ணி கொல்ல ஆரம்பிக்க எப்படி தப்பித்தார்கள் என்பதை படத்தில் பாருங்கள்.  படத்துல பெரிய லெவல்

Spring – 2014Spring – 2014

Spring Movie Review  Horror, SciFi & Romance கலந்த ஒரு வித்தியாசமான படம் பாக்கனும்னா இந்த படம் பாருங்க.  அமெரிக்காவிருந்து இத்தாலிக்கு செல்லும் இளைஞனுக்கும் அங்கு வசிக்கும் மர்மமான ஒரு பெண்ணுக்கும் இடையே வரும் காதல் பற்றிய படம். ஹீரோ

No Exit – 2022No Exit – 2022

No Exit – 2022 Hulu Movie Tamil Review  நேத்து Hulu ல ரிலீஸ் ஆகி இருக்கும் ஒரு Horror Thriller .  புயலின் காரணமாக ஒரு முகாமில் தஞ்சமடைகிறார் ஹீரோயின். அங்கு வெளியே ஒரு காரில் ஒரு கடத்தப்பட்ட