செர்னோபில் (Chernobyl) – 2019

34 வருடங்களுக்கு முன்பு ஏப்ரல் 26, 1986 அன்று உக்ரைனில் உள்ள செர்னோபில் என்ற இடத்தில் நடந்த அணு உலை விபத்தை ஆராயும் விதத்தில் எடுக்கப்பட்ட ஒரு குறுந் தொடர். HBO வால் தயாரிக்கப்பட்ட இத்தொடரில் 5 எபிசோட்கள் உள்ளது. ஒவ்வொரு எபிசோடும் ஒரு மணிநேரம் ஒடுகிறது.
ஏப்ரல் 26 அன்று ஒரு பாதுகாப்பு சோதனையின் போது ஒரு விபத்து ஏற்படுகின்றது. ஆரம்பத்தில் சிறு விபத்து என நினைத்து அதை தடுப்பதற்கான வழிமுறைகளில் லோக்கல் தீயணைப்பு வீரர்கள் களமிறங்குகிறது.
ஆனால் திறமையான விஞ்ஞானி Valery Lagasov (Jarred Harris) இது சிறிய விபத்து இல்லை என்றும் அணு உலை வெடித்து விட்டது என்றும் கணித்து சொல்கிறார்.
ஆரம்பத்தில் அரசு அதிகாரிகள் நாட்டின் பெயர் கெடாமல் இருக்க மூடி மறைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் நேரம் செல்லச் செல்ல நிலைமையின் தீவிரம் தெரிய வருகிறது.
வெடித்து சிதறிய அணு உலை பக்கத்தில் கூட நெருங்க முடியாத நிலை. எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவுகிறது மற்றும் பல உயிர்கள் பலி ஆகிறது.
இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் எவ்வாறு அணு உலை விபத்தினை கட்டுக்குள் கொண்டு வந்து கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றினார்கள் என்பதை விவரிக்கும் தொடர்.
விபத்து முடிந்த பின்பும் கதிரியக்கத்தை கட்டுப்படுத்த செய்யும் முயற்சிகள் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. மற்றும் அணு உலையின் வீரியம் மற்றும் தவறு ஏற்பட்டால் அதனால் வரும் பின் விளைவுகளை தெளிவாக காட்டி உள்ளனர்.
இந்த தொடரை பார்த்த பின்பு அணுஉலை மின்சாரம் மற்றும் அதன் தேவை குறித்த நமது பார்வை கண்டிப்பாக மாறிவிடும். அணுஉலை பற்றிய செய்திகளை கேட்கும்போது மனதில் ஒருவித இனம்புரியாத பயம் வருவதை தவிர்க்க முடியாது.
ஹாட் ஸ்டாரில் உள்ளது :