கார்கோ (Cargo) – 2017

கார்கோ (Cargo) – 2017

இது ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த ஜாம்பி (Zombie) திரைப்படம்.   
ஜாம்பி திரைப்படங்களுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் உண்டு(நானும் அதில் ஒருவன்) . பல பரிமாணங்களில் ஜாம்பி படங்கள் வந்து விட்டது. 
உதாரணமாக சீரியசான ஜாம்பி படங்கள் ( REC, 28 Days Later, Resident Evil etc., ), காமெடி கலந்த ஜாம்பி படங்கள் ( Shaun of the dead,. Zombieland 1 & 2 ), ஜாம்பியை காதல் ‌செய்வது (Warm bodies)   என இன்னும் பல வகையான ஜாம்பி படங்களை சொல்லிக் கொண்டே போகலாம். 
இதிலிருந்து கொஞ்சம் மாறுபட்ட படம் தான் கார்கோ. 
ஜாம்பி படங்களில் பொதுவாக சில எழுதப்படாத விதிமுறைகள் உள்ளன. உதாரணமாக ஜாம்பி கடித்தாலோ இல்லை அதன் ரத்தம் பட்டாலோ பாதிக்கப்பட்ட நபர் சிறிது நேரத்தில் ஜாம்பியாக மாறிவிடுவார், மூளையில் சுட்டாலும் அல்லது குத்தினாலும் ஜாம்பி செயல் இழந்து விடும். 
ஆனால் இந்த படத்தில் கடி வாங்கிய ‌பின் 48 மணிநேரம் கழித்து தான் முழு ஜாம்பியாக மாறுவார்கள். இது தான் இந்த படத்தை நகர்த்தி செல்கிறது. 
பொதுவாக ஜாம்பி படங்கள் பற்றியும் மற்றும் இந்த திரைப்படத்துக்கு உண்டான விதிமுறைகளை தெரிந்து கொண்டோம் 😀. இப்பொழுது படத்தை பற்றி ‌பார்க்கலாம். 
ஒரு வைரஸ் ஆஸ்திரேலியா முழுவதும் பரவி அங்கு உள்ள மனித இனத்தை அழித்து வருகிறது. 
ஒரு படகில் அப்பா (Andy – Martin Freeman ) , அம்மா (Kay – Susie Portor) மற்றும் கைக்குழந்தை (Rosie) பயணிக்கின்றனர். ஆற்றில் மிதந்து வரும் மருத்துவ உபகரணங்களை எடுக்கிறான் ஆன்டி. அந்த பெட்டியில் ஜாம்பி கடி வாங்கினால் கஷ்டப்படாமல் மூளையை செயலிலக்க வைக்கும் ஊசி உள்ளது. 
கரையில் மற்றொரு குடும்பத்தினரை ஆன்டி பார்க்கிறான். அவர்களோடு பேசலாம் என கையை அசைக்க பதிலுக்கு அந்த குடும்ப தலைவன் துப்பாக்கியை காட்டுகிறான். எதுவும் பேசாமல் படகை நகர்த்தி செல்கிறான். இந்த ஒரு காட்சியில் உலகின் அப்போதைய நிலைமை தெளிவாக காட்டப்படுகிறது. 
ஆன்டி மற்றும் கே உரையாடல்களில் இருந்து படகில் சேகரித்து வைத்த உணவு மிகவும் குறைந்து விட்டதாக தெரிகிறது.  அவர்கள் பாதுகாப்பு கிடைக்கும் என்பதால் ஒரு இராணுவ நிலையை நோக்கி பயணிக்கின்றனர். 
வழியில் ஒரு சிதிலமடைந்த படகில் உணவை தேடுகையில் எதிர்பாராத விதமாக ஜாம்பியிடம் கடி வாங்கி விடுகிறாள் கே. 
கே வின் 48 மணிநேரம் ஆரம்பிக்கிறது. மருத்துவமனை செல்லலாம் என முடிவு செய்து படகில் இருந்து இறங்கி கரையில் ஒரு காரை கண்டுபிடித்து பயணிக்கிறார்கள். 
செல்லும் வழியில் ஒரு ஜாம்பியினால் விபத்து ஏற்பட்டு மயக்கம் அடைகின்றனர். இந்த தருணத்தில் முழுவதுமாக மாறிய மனைவி ஜாம்பியிடம் கடி வாங்குகிறான் ஆன்டி. 
ஆன்டியின் 48 மணிநேரம் ஆரம்பிக்கிறது. மனைவியை ஊசி போட்டு இறக்க வைத்து விட்டு தன் குழந்தைக்கு அடைக்கலம் தேட கிளம்புகிறான். 
இராணுவ நிலை சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது அங்கு உள்ள பெண் முதலுதவி செய்து தூமி என்ற பழங்குடி இன பெண் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் செல்லுமாறு கூறுகின்றார். 
போகும் வழியில் விக் என்பவனுக்கு உதவி செய்கிறான்‌. அவர் மனைவி லோரைன் அவன் குழந்தையை பார்த்து கொள்கிறார். 
ஆனால் விக் கொடூரமான முறையில் பொறி வைத்து  ஜாம்பிகளை பிடித்து அவர்களின் உடைமைகளை எடுத்து சேமிக்கிறான். பின்னாளில் உலகம் இயல்பானால் உதவும் என்கிறான். 
லோரைன் தான் விக் மனைவி இல்லை என்றும் 
தன்னை காப்பாற்றுமாறு கெஞ்சி கேட்க , இதை பார்த்த விக் ஆன்டியை அடித்து பொறியில் போட்டு விடுகிறான். 
ஆன்டி மயக்கம் தெளிந்து பார்க்கையில் கூண்டில் இவன் தேடி வந்த தூமியும் இருக்கிறார். 
இருவரும் எவ்வாறு தப்பித்தார்கள்? விக் மற்றும் லோரைன் என்ன ஆனார்கள்? ஆன்டி தனக்கு உள்ள குறைந்த நேரத்தில் எவ்வாறு தன் குழந்தையை மற்றும் தூமியை அவர்கள் கூட்டத்தில் சேர்த்தான் என்பது மீதி கதை. 
ஆன்டி கதாபாத்திரத்தில் Martin Freeman தனி ஆளாக படத்தை நகர்த்தி செல்கிறார். மனைவியை கொல்லும் காட்சி, தன் நேரம் முடிவதற்குள் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற பரபரப்பு, பாதி ஜாம்பி மீதி மனிதன் என்ற நிலையில் குழந்தையை காக்க படும் பாடு கடைசியில் வாசனை திரவியத்தை நுகர்ந்த பின் நடக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். 
ஒளிப்பதிவு ஆஸ்திரேலியா வறண்ட பகுதிகளை சிறப்பாக படம் பிடித்து ஜாம்பி படத்துக்கு தேவையான சூழ்நிலையை தருகிறது. படத்தின் இயக்கம் சூப்பர். 
மொத்தத்தில் குடும்ப பாசம் நிறைந்த ஜாம்பி படம் தான் கார்கோ.  
கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.
Directors: Ben Howling and Yolanda Ramke
Screenwriter: Yolanda Ramke
Principal cast:
Martin Freeman
Susie Porter
Simone Landers
Anthony Hayes
Caren Pistorius
Kris McQuade
Natasha Wanganeen
David Gulpilil
Country: Australia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Super Dark Times – 2017Super Dark Times – 2017

Super Dark Times Tamil Review  High School ல் படிக்கும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். இருவருக்கும் ஒரே பெண் மீது கண். எதிர்பாராத ஒரு  சம்பவம் இவர்களின் வாழ்க்கையை மாற்றுகிறது. IMDb 6.6 Tamil dub ❌ OTT

Post Apocalyptic Movies – Part 2Post Apocalyptic Movies – Part 2

Post Apocalyptic Movies – Part 2  1. The Road உலகம் அழிஞ்ச பின்பு அப்பாவும் மகனும் கடற்கரையில் ஏதாவது வாழ வழி கிடைக்குமா என அதை நோக்கி செல்லும் பயணம் தான் படம்.  Full Review 2. What

Fear Street Part One : 1994 (2021)Fear Street Part One : 1994 (2021)

எழுத்தாளர் R.L.Stine எழுதிய புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட ஹாரரர்  திரைப்படம்.  இந்த திரைப்படம் அடுத்த அடுத்த வாரங்களில் மூன்று பாகங்களாக வெளிவருகிறது. July 2 முதல் பாகமான இந்த படம் வெளிவந்து உள்ளது. July 9 மற்றும் July 16 -ல்