மதர் (Mother) – 2009

மதர் (Mother) – 2009 Korean Movie Tamil Review 

இது ஒரு கொரியன் திரைப்படம். 

பிரபல இயக்குனர் Boon Joon Ho இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். இவருடைய திரைப்படங்கள் மிகவும் நேர்த்தியாக மற்றும் விறுவிறுப்பாகவும் இருக்கும். உதாரணமாக மெமோரிஸ் ஆஃப் மர்டர், ஃபாரசைட், தி ஹோஸ்ட் போன்ற திரைப்படங்களை சொல்லலாம்.

மதர் திரைப்படத்தைப் பற்றி பார்க்கலாம்.

A mother’s love for her child knows no law, no pity.

It crushes down remorselessly all that stands in its path. – Agatha Christie.

Joon-ho Bong, Hye-ja Kim, Bin Won,Joon-ho Bong, Wun-kyo Park,Kyung-Pyo Hong,Byeong-woo Lee,mother Korean movie review, மதர் கொரியன் திரைப்பட விமர்சனம்

அம்மா தன் பிள்ளைகளின் மீது கொண்ட பாசத்திற்கு எந்த எல்லையும் கிடையாது. தன் குழந்தைக்கு ஏதும் ஆபத்து என்றால் நியாயம் அநியாயம் என எதையும் பார்க்க மாட்டாள் அம்மா.

– அகத்தா கிறிஸ்டி

படத்தின் கதை இந்த இரண்டு வரிகளில் அடங்கிவிடும்.

ஒரு சிறிய ஊரில் ஏழ்மையான நிலையில் தாய் மற்றும் மனநிலை சற்று சரியில்லாத மகனும் (டோ ஜூன்) வசித்து வருகின்றனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு அக்குபஞ்சர் வைத்தியம் செய்து அதில் வரும் படத்தில் குடும்பம் ஓட்டுகின்றனர். மகன் மீது அளவுகடந்த பாசம் வைத்துள்ளார்.

டோ ஜுன் இன் ஒரே ஒரு நண்பன் ஜுன்டே.

இருவரும் ஒரு சிறிய விபத்தில் சிக்குகின்றனர். இவர்களை அடித்த கார் நிற்காமல் சென்று விட அதை விரட்டி செல்கின்றனர். ஒரு கோல்ப் மைதானத்தில் அவர்களை பிடிக்கின்றனர். ஜுன் டே சண்டையில் இறங்க டோஜுன் அங்கு உள்ள குட்டையில் கிடக்கும் கோல்ஃப் பந்துகளை எடுத்து வருகிறார்.

இரவு ஜுன்டேயை சந்திக்க ஒரு பாருக்கு செல்கிறான் டோ ஜுன் ஆனால் அவன் வராததால் நள்ளிரவில் தனியாக வீடு திரும்புகிறான். வரும் வழியில் ஒரு இளம் பெண் தனியாக நடந்து செல்வதை பார்த்து அவளை பின் தொடர்ந்து செல்கிறான்.

அந்த பெண் ஒரு பெரிய சைஸ் கல்லை தூக்கி போட்டு மிரட்ட பின் வாங்குகிறான்.

அடுத்த நாள் காலை அந்த பெண் கொலை செய்யப்பட்டு அந்த வீட்டின் மொட்டை மாடியில் ஊருக்கே தெரியும் வகையில் கிடந்தப் பட்டிருக்கிறார்.

அங்கு கிடந்த கோல்ஃப் பந்தை வைத்து டோஜுன்யை கைது செய்கிறது காவல் துறை.

ஆனால் டோஜுன் கொலை செய்து இருக்க மாட்டான் என்று அவன் அம்மா நம்புகிறார்.

போலீஸ் மற்றும் வக்கீல் இருவரும் எதுவும் செய்ய முடியாது என்று கைவிட்டு விடுகின்றனர்.

மகனின் நண்பன் ஜுன்டே உதவியுடன் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார்.

விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவருகிறது. அந்த பெண்ணை கொன்றது யார் ? ஏன் அவ்வாறு வீட்டு மொட்டை மாடியில் அவள் ‌உடல் கிடந்த பட்டது என்பது தெரியும் பொழுது ஆச்சரியமாக இருந்தது.

கொன்றது யார் என்று தெரிந்த பின் மகனை காப்பாற்ற அம்மா எடுக்கும் முடிவு வேற லெவல்.

அம்மா பாத்திரத்தில் நடித்த Hye Ja Kim அருமையாக நடித்துள்ளார்.

மிக எளிமையான கதை ஆனால் சூப்பரான திரைக்கதை மற்றும் அருமையான இயக்கம் காரணமாக போரடிக்காமல் நகர்கிறது படம்.

ஒளிப்பதிவு மற்றும் இசை மிக மிக அருமை.

கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் மதர்

Director: Joon-ho Bong

Cast: Hye-ja Kim, Bin Won, Goo Jin

Screenplay: Joon-ho Bong, Wun-kyo Park

Cinematography: Kyung-Pyo Hong

Music: Byeong-woo Lee

மேலும் பல கொரியன் திரைப்பட விமர்சனங்களை தமிழில் படிக்க எனது பிளாக்கை பின் தொடரவும் :

IMDBRating on 21st July 2020 7.8/10

திரைப்படம் எந்த ஸ்டிரீமிங் சர்வீஸிலும் இல்லை. Telegram app install செய்து படத்தின் பெயரை வைத்து தேடவும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Admiral Roaring Currents – 2014Admiral Roaring Currents – 2014

1597 ல் நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வார் படம்.    ஜப்பான் கொரியா மீது படை எடுக்குது. கடலில் ஒரு பகுதியை தாண்டி விட்டால் கொரியா சோலி முடிஞ்சது.  கொரிய தளபதி வசம் இருப்பது 12 கப்பல்கள்,

ஒக்ஜா (Okja) – 2017ஒக்ஜா (Okja) – 2017

ஒக்ஜா (Okja) – 2017 – விமர்சனம் / Review  பிரபல கொரியன் திரைப்பட இயக்குனர் Bong Joon Ho வின் மற்றுமொரு படைப்புதான் ஒக்ஜா. இவர் பல அருமையான திரைப்படங்களை இயக்கி உள்ளார் உதாரணமாக மதர், மெமரிஸ் ஆஃப் தி

Train To Busan – 2016Train To Busan – 2016

Train To Busan – 2016 Korean Movie Review In Tamil    ரொம்பவே பிரபலமான கொரியன் ஜாம்பி படம் இது. இந்த படத்தை பெரும்பாலான சினிமா ரசிகர்கள் பார்த்து இருப்பார்கள்.    IMDb 7.6 Language: Korean  Tamil