தி டிசன்ட் ( The Descent) – 2005

தி டிசன்ட் ( The Descent)  – 2005

இது ஒரு பிரிட்டிஷ் ஹாரர் திரைப்படம்.  முன்பின் தெரியாத ஒரு குகைக்குள் சாகச பயணம் மேற்கொள்ளும் நண்பர்கள் குழு கனவில் கூட நினைக்க முடியாத பிரச்சனையில் சிக்கி மீண்டார்களா என்பதை சொல்லும் திரைப்படம். 
படத்தின் நாயகி சாரா மற்றும் அவரது நண்பர் ஜூனோ. சாரா வின் கணவர் மற்றும் குழந்தை ஒரு கார் விபத்தில் இறந்து விடுகிறார்கள் அதிர்ஷ்டவசமாக சாரா மட்டும் தப்பித்து விடுகிறார். இறந்த குழந்தையை நினைத்து மன அழுத்தத்தில் விழுகிறார். 
இந்த சம்பவம் முடிந்து ஒரு வருடம் ஆன நிலையில் ஜூனோ சந்திக்கிறார். சாராவின் மனநிலையை மாற்றும் பொருட்டு ஒரு சாகச பயணம் மேற்கொள்ளலாம் என்கிறார் ஜூனோ. 
சாரா, ஜூனோ மற்றும் நான்கு நண்பர்கள் என மொத்தம் ஆறு பேர் கொண்ட குழு குகைக்குள் சாகச பயணம் மேற்கொள்ள ரெடியாகிறது.
குகைக்குள் சென்றவுடன் சிறிது நேரத்தில் ஏற்படும் சிறிய விபத்தின் காரணமாக உள்ளே வந்த வழி அடைப்பட்டு விடுகிறது. 
பயணத்தை ஏற்பாடு செய்து ஜூனோ இந்தக் குகைக்கு இதற்கு முன்னால் வந்தது இல்லை எனவும் இதுவரை எவரும் இந்த வந்ததே இல்லை என்கிறார். ஆனால் இன்னொரு பக்கத்தில் வழி இருக்கலாம் என்கிறார். 
வேறுவழியின்றி அனைவரும் குகையின் முன் நோக்கி நகர்கின்றனர்‌. சாரா இருட்டில் ஏதோ ஒரு உருவத்தைப் பார்த்தேன் என்கிறார் ஆனால் மற்ற நண்பர்கள் நம்ப மறுக்கின்றனர். 
ஆனால் சிறிது நேரத்தில் சிதிலமடைந்த மனித முகத்துடன் மற்றும் நகங்களுடன் ஒரு உருவம் வந்து அவர்களைத் தாக்குகிறது. 
அனைவரும் உயிருக்கு பயந்து ஓடுகின்றனர். மனிதர்கள் ஒவ்வொருவராக தாக்குகின்றன. எவ்வாறு குகை மனிதர்களிடமிருந்து தப்பித்தனர் என்பது பற்றிய கதை. 
படம் மிகுந்த திகிலாக செல்கிறது. குகை மற்றும் குறைந்த வெளிச்சத்தில் நடக்கும் சம்பவங்கள் மேலும் பீதியடைய வைக்கின்றன. 
நாயகி இந்த ஜந்துக்களிடம் இருந்து தப்பித்து ரத்த குளத்தில் விழுவது மற்றும் தப்பிக்கும் காட்சிகள் திக் திக் ரகம். 
மிகச்சிறந்த இயக்கம், இசை மற்றும் ஒளிப்பதிவு.
திகில் திரைப்பட பிரியர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

All My Friends Hate Me – 2022All My Friends Hate Me – 2022

30+ வயதில் இருக்கும் ஹீரோ பல வருடங்கள் கழித்து தன்னுடைய காலேஜில் கூட படிச்ச நண்பர்களை சந்திக்க ஒரு ஒதுக்கு புறமான பங்களாவுக்கு  போகிறான். அங்கு நடக்கும் வித்தியாசமான சம்பவங்கள் தான் படம்.  பக்காவான ஹாரர் மெட்டீரியல் மாதிரி இருக்குல. ஆனா

Dead calm – 1989Dead calm – 1989

Dead calm tamil review  ஒரு துயர சம்பவத்தை மறக்க சொகுசு Boat ல் தனியாக பயணம் செய்யும் ஒரு ஜோடி. நடுக்கடலில் படகு மூழ்க போகிறது என தஞ்சம் அடையும் ஒருவன்‌. அதன் பிறகு நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் தான்

The Nameless Days – 2022The Nameless Days – 2022

மாயன் காலண்டர் படி 20 வருஷத்துக்கு ஒருக்க 5 நாள் எந்த மாசத்துலயும் சேராதாம் அதுதான் Nameless days. இந்த டைம்ல மாயன் கடவுள்கள் வந்து மனிதர்களை வேட்டையாடும் என்ற கான்செப்டை வைத்து வந்திருக்கும் horror படம்.  IMDb – Not