தி ஓல்ட் கார்ட் – The Old Guard

தி ஓல்ட் கார்ட் – The Old Guard – 2020

 இது ஒரு‌‌ ஃபேண்டஸி கலந்த ஆக்ஷன் திரைப்படம். 
நாங்க நாலுபேர் எங்களுக்கு சாவே கிடையாது என்று நல்லவங்களுக்கு உதவி செய்யும் ஹீரோயின் மற்றும் அவளுடைய குழு.
இவனுங்க மட்டும் எப்படி சாகாம இருக்காங்க. அவங்கள புடிச்சு ரத்தம், டிஎன்ஏ எல்லாம் எடுத்து ஆராய்ச்சி பண்ணலாம். அது மூலமா மருந்து கண்டுபிடிச்சா நமக்கும் பணம் கிடைக்கும் அதுபோக மத்த மனுஷங்களுக்கு சாவே இல்லாம சந்தோசமா இருக்கலாம் என்று திட்டமிட்டு அவர்களை பிடிக்க நினைக்கும் வில்லன் விஞ்ஞானி மற்றும் அவனுடைய பாதுகாப்பு படைக்கு நடுவே நடக்கும் சண்டைதான் படத்தின் கதை. 
நெட்பிளிக்ஸ் தயாரித்து வெளியிட்ட திரைப்படம். திரைப்படம் ஜூலை 10 2020 அன்று வெளிவந்துள்ளது. 
படத்தின் கரு என்னமோ நன்றாக தான் இருக்கிறது  ஆனால் எடுத்த விதம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். 
இந்த நான்கு பேர் குழுவில் உள்ள அனைவருக்கும் வயது நூற்றாண்டுகளில் உள்ளது. ஒருவர் நெப்போலியன் படையில் சண்டையிட்டேன் என்கிறார். ஹீரோயின் வயது சொல்லப்படவே இல்லை கிட்டத்தட்ட 4000 வருடங்கள் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.  
குழுவின் தலைவியின் பெயர் ஆண்டி( Charlize Theron – Mad Max படத்தில் நாயகியாக வருபவர் தான்) . இவருடைய கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நடிப்பதற்கான காட்சிகள் எதுவும் அவ்வளவாக இல்லை. அக்ஷன் காட்சிகளில் கலக்கி இருக்கிறார்.  குழுவில் உள்ள மற்ற மூன்று பேர் கதாபாத்திரங்கள் அவ்வளவாக எடுபடவில்லை. நடிகர்களும் அவ்வளவாக தெரிந்த முகமாக இல்லை. 
காஃப்ளி ( Chiwetel Ejiofor – 12 Years a slave , 2012   போன்ற படங்களில் நடித்துள்ளார்) என்பவன்  இந்த சாகாவரம் பெற்ற குழுவை விஞ்ஞானியிடம் (Harry Melling)  கோர்த்து விடும் வேலையை செய்கிறான். அவன் ஏன் இவர்களை அந்த சைக்கோ விஞ்ஞானி இடம் கோர்த்து விடுகிறான் என்பதற்கு சொல்லப்படும் காரணம் அவ்வளவாக பொருந்தவில்லை. 
திடீரென்று நான்கு பேர் கனவிலும் நைல் (Kiki Layne) என்ற ஒரு இளம் அமெரிக்கா ராணுவ வீராங்கனை வருகிறார். இவ்வாறு கனவில் வந்தால் அந்த பெண்ணும் சாகாவரம் பெற்றவர் எனப்பொருள். அவரை தேடி கண்டுபிடித்து தங்களுடைய குழுவில் சேர்த்துக்கொள்கின்றனர். 
நைல் குழுவில் சேர்ந்து கொஞ்ச நாளில் குழுவின் தலைவி ஆண்டி சாகவரம் பெற்ற தன்மையை இழக்க ஆரம்பிக்கிறார். குழுவில் அனைவரும் என்னாச்சு என்னாச்சு என்று அதிர்ச்சி அடைகின்றனர். ஆனால் நமக்கு தெளிவாக நைல் வந்ததன் காரணமாகத்தான் இவ்வாறு நடக்கிறது அவர்தான் படத்தை முடித்து வைக்கப் போகிறார் என்பதும் தெரிகிறது. 
இதுபோன்று நாமே யூகிக்கக்கூடிய காட்சிகள் படத்தின் பலவீனம். 
படத்தை Gina Prince – Bythewood  என்ற பெண் இயக்குனர் இயக்கியுள்ளார். இதற்கு முன்னர் love and basketball என்று ஒரு படத்தை இயக்கியுள்ளார். கொஞ்சம் தேடிப் பார்த்தால் இந்தப் படம் நன்றாக இருக்கும் போல் தெரிகிறது. பார்க்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.
மற்றபடி கொஞ்சம் வித்தியாசமான கதை அருமையான ஆக்சன் காட்சிகள் மற்றும் நாயகி இப்படத்தின் பாசிடிவ் விஷயங்கள். 
கொஞ்சம் மெதுவான திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்கள் மற்றும் யூகிக்கக்கூடிய காட்சி அமைப்பு படத்தின் நெகட்டிவ் விஷயங்கள். 
யார் இந்த நால்வரும்  மற்றும் எவ்வாறு சாகாவரம் பெற்றனர் என்பதை கூறியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். 
படத்தின் முடிவை வைத்து பார்க்கும் பொழுது இன்னொரு பாகம் வரும் என தெரிகிறது.
என்னை பொருத்தவரை ஒரு முறை பார்க்க வேண்டிய படம். 

2 thoughts on “தி ஓல்ட் கார்ட் – The Old Guard”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Headshot – ஹெட் ஷாட் – 2016Headshot – ஹெட் ஷாட் – 2016

Headshot – Indonesian Action Movie இந்தோனேசிய நாட்டில் இருந்து வந்த தற்காப்பு கலையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மற்றொரு ஆக்ஷ்ன் அதிரடி திரைப்படம் .  படத்தின் பெயரை பார்த்த உடன் தெரிந்து இருக்கும் வன்முறை தூக்கலான படம் என்று. ஹீரோ சிலாட்

Enola Holmes – எனோலா ஹோம்ஸ் (2020)Enola Holmes – எனோலா ஹோம்ஸ் (2020)

Enola Holmes – எனோலா ஹோம்ஸ் (2020) – Review In Tamil  பிரபல OTT நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் இன்று வெளியான திரைப்படம்.  இது 1800-களில் பிரிட்டனில் நடப்பது போன்ற கதை ஆக்ஷ்ன் கலந்த அட்வென்சர் திரைப்படம்.   பிரபல

See Season 1 ReviewSee Season 1 Review

See – Season 1 – 2019Episodes 8Tamil Subs ✅ @Apple TV+Genre: Post Apocalyptic⭐⭐⭐⭐.25/5 வைரஸ் தாக்குதல் காரணமாக உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் இறந்து விடுகிறார்கள் மீதம் உள்ளவர்கள் பல தலைமுறைகளாக கண்பார்வை இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.