அன்ஃபர்கிவ்வன் (Unforgiven)

அன்ஃபர்கிவ்வன் (Unforgiven Tamil Review) – 1992

18ஆம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் நடக்கும் கதை. மனைவியை இழந்து  தான் சிறு குழந்தைகளுடன் ஒரு கிராமப்புறத்தில் கால்நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்தும் ஒரு வயதான முன்னாள் ரவுடி கிளின்ட் ஈஸ்ட்வுட். 
அன்ஃபர்கிவ்வன் (Unforgiven) movie review in Tamil, ஹாலிவுட் விமர்சனங்கள் தமிழில் ,Clint Eastwood,Gene  Hackman, Morgan Freeman, Richard Harris
அவரை தேடி குதிரையில் வரும் ஒரு இளைஞன், சில திருடர்களை பிடித்து கொடுத்தால் கை நிறைய பணம் கிடைக்கும். உங்களை துணைக்கு அழைத்து செல்லலாம் என நினைத்தேன் என்று அழைக்கிறான். முதலில் தயங்கும் ஈஸ்ட்வுட் அங்கே மேயும் பன்றிகளை அலட்சியமாக பார்த்துவிட்டு குதிரையில் ஏறுகிறார். போகும் வழியில் தான் முன்னாள் கூட்டாளி மார்கன் பிரீமேனையும் உடன் அழைத்து செல்கிறார். துப்பாக்கியை தூக்கி பல ஆண்டுகள் ஆன கிழடுகள் இரண்டும் அந்த இளைஞனுடன் சேர்ந்து வேட்டைக்கு கிளம்புகிறார்கள்.
சரி. யாரை வேட்டையாட வேண்டும்? யார்  அந்த கயவர்கள்.?  அவர்களை பணம் பிடிக்க பணம் கொடுப்பது யார்? 
அங்கீகரிக்கப்பட்ட விலைமாதர்கள்  கூடத்திற்கு வரும் இரு கயவர்கள்,  அங்கே இருக்கும் ஒரு அழகிய பெண்ணை கத்தியால்  பல்வேறு இடங்களில் கொடுமையாக கீறி அலங்கோலப்படுத்திவிட்டு சிறு தண்டனையுடன் தப்பி விடுகிறார்கள். விடுதிகாப்பாளனும் ஷெரீப்பும் கயவர்களுக்கு சாதகமாக இருக்கவே  சரியான நீதி கிடைக்காத காரணத்தினால் மாதர்கள் அனைவரும் தங்களிடம் சேரும் பணத்தை ஒன்று திரட்டி, அந்த கயவர்களின் தலைக்கு விலை நிர்ணயிக்கிறார்கள். அவர்களின் தலையை எடுப்பது தான் இந்த மூவரின் நோக்கம். 
அந்நியர்கள் துப்பாக்கியுடன் ஊருக்குள் வரக்கூடாது அப்படியே வந்தாலும் பெரும் தண்டனை என்ற கடும் சட்டத்துடன் நகரை நிர்வகிக்கும் ஷெரீப்பை மீறி மூவரும் சேர்ந்து  எப்படி அந்த கயவர்களை பழிதீர்த்தார்கள் ? அந்த மாதர்களுக்கு நியாயம் கிடைத்ததா என்பதை பரபரப்பாக கூறுகிறது இந்தப்படம். 
கத்தியால் வெட்டுப்பட்ட பெண் ஈஸ்ட்வுட்டிடம் வந்து நன்றி தெரிவிக்கும் பொது, என் முகம் கோரமாக மாறிய பின் என்னை யார் அணுகுவதில்லை என்று ஆதங்கப்படும் காட்சி கொஞ்சம் நெகிழ வைக்கும். 
வழவழவென தற்பெருமை பேசிக்கொண்டே இருக்கும் அந்த இளைஞன், கயவனை கண்முன் கண்டதும் சுடமுடியாமல் தொடை நடுங்கிப்போய் தடுமாறி நிற்க, பின்னர் தான் இதுவரை எந்த கொலையும் செய்ததில்லை, பணக்கஷ்டத்தினால் தான் இந்த முடிவெடுத்தேன் என  அழும் காட்சி கொஞ்சம் பரிதவிக்க வைக்கும். 
கயவர்களை வேட்டையாடிவிட்டு கிளம்பும் தருணத்தில், தன் நண்பனை அநியாயமாக கொன்று நடுவீதியில் காட்சிப்பொருளாக வைத்த ஷெரீப்பை அவர் கோட்டைக்கே சென்று ஈஸ்ட்வுட் வேட்டையாடும் காட்சி அதிர வைக்கும். 
ஒரு முறை இந்தப்படத்தை பார்த்தால், மீண்டும் ஒருமுறை நிச்சயம் பார்க்க வைக்கும். 
கிளின்ட் ஈஸ்ட்வுட்  தயாரித்து இயக்கி நடித்த இந்த திரைப்படம் பல ஆஸ்கர்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுவும் ஷெரீப்பாக வரும் ஜென் ஹெக்மனின் அசாத்தியமான வில்லத்தனம் அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்காரை வாங்கிக்கொடுத்தது.

1 thought on “அன்ஃபர்கிவ்வன் (Unforgiven)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Witcher – Season – 2The Witcher – Season – 2

The Witcher – Season – 2  Tamil Review  இன்னும் முதல் சீசன் பார்க்கவில்லை என்றால் அதை பார்த்து விட்டு 2 சீசன் ஆரம்பிக்கவும்.  1st Season Review :  முதல் சீசனில் சிரி மற்றும் Geralt இணைந்தது உடன்

ஃபௌடா (Fauda) – சீசன் (Season 1)ஃபௌடா (Fauda) – சீசன் (Season 1)

ஃபௌடா (Fauda)  – சீசன் (Season 1)    இது இஸ்ரேல் நாட்டில் இருந்து வந்த தொடர்.  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடர்.      இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் பாலஸ்தீன புரட்சியாளர்களுக்கும் நடுவே நடக்கும் சம்பவங்களை

2021 – ஒரு பார்வை2021 – ஒரு பார்வை

2021 ஒரு வழியா முடிகிறது. இந்த வருடமும் பெரும்பாலான பகுதியை கொரானா ஆக்கிரமித்து கொண்டது. ஆனால் 2020 ஐ ஒப்பிடுகையில் இந்த வருடம் கொஞ்சம் பரவாயில்லை.  2020 ல் ட்விட்டரில் கணக்கு ஆரம்பித்தேன். நிறைய போஸ்ட்டுகள் போட்டேன் . ஆனால் பெரிதாக