The Croods Tamil Review
இது குகை மனிதன் மற்றும் அவனுடைய குடும்பம் பற்றிய நகைச்சுவை திரைப்படம்.
க்ரக் (Nicolas Cage ) தனது குடும்ப உறுப்பினர்களான மனைவி, 2 மகள்கள், மகன், மற்றும் மாமியாருடன் மலைகள் நடுவே குகைக்குள் வசிக்கிறான்.
ஒவ்வொரு வேளையும் உணவுக்கு வேட்டை ஆட வேண்டும். குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்ட கண்டிப்பான குடும்ப தலைவன்.
மகளுக்கு குகையை விட்டு வெளியேறி வேறு இடத்திற்கு செல்ல ஆசை. ஆனால் தந்தையை பொறுத்தவரை குகை தான் பாதுகாப்பான இடம்.
ஒரு நாள் நிலநடுக்கம் காரணமாக குகை அழிந்து விடுகிறது. அப்போது வருகிறான் கய் (Guy-Ryan Reynolds ). புத்திசாலி மற்றும் நாகரிகத்தில் க்ரக் குடும்பத்தை விட மேலானவன்.
க்ரக்கின் மகள் எப் (Eep- Emma Stone ) பிற்கு கய் மீது ஈர்ப்பு. ஆனால் க்ரக்ற்க்கு அவனை சுத்தமாக பிடிக்கவில்லை.
ஆனால் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அவனுக்கு வழி தெரியும் என்ற காரணத்தால் அவனுடன் பயணம் செய்ய சம்மதிக்கிறான்.
பல தடைகள் மற்றும் ஆபத்துக்களை கடந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் பயணத்தை நகைச்சுவை கலந்து சுவாரஸ்யமாக சொல்லும் படம் தான் தி குருட்ஸ்.
படம் முழுவதும் சிரிப்பு மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளுக்கு பஞ்சமில்லை.