ஃபாரஸ்ட் கம்ப் (Forrest Gump )

ஃபாரஸ்ட் கம்ப் (Forrest Gump)

இது ஃபாரஸ்ட் கம்ப் எனும் கதாபாத்திரத்தின் வாழ்க்கையை பற்றிய திரைப்படம. ஒரு நல்ல feel good movie.
இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் கிடையாது. நம்முடைய எண்ணங்கள் நன்றாக இருந்தால் நம் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதை சொல்லும் திரைப்படம்.
ஃபாரஸ்ட் கம்ப் திரைப்பட விமர்சனம் தமிழில்,  Forrest Gump movie review in Tamil ,  Tom Hanks, டாம் ஹாங்க்ஸ், ஹாலிவுட் விமர்சனங்கள் தமிழில்
பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து இருக்கும் ஃபாரஸ்ட் கம்ப் அருகிலுள்ள நபரிடம் தன்னுடைய கதையை சொல்லத் தொடங்கும்போது படம் ஆரம்பிக்கிறது.
சிறு வயதில் ஏற்பட்ட சிறு விபத்து காரணமாக நடக்க முடியாமல் இருந்தது, ஜென்னி என்ற நண்பியின் அறிமுகம், தற்செயலாக சைக்கிளில் துரத்தும் ரவுடி மாணவர்களிடம் தப்ப வேண்டி தன்னால் நடக்க முடியாததை மறந்து ஓடுவது.
இளைஞன் ஆன பின்பு அதே மாணவர்கள் காரில் துரத்த மறுபடியும் ஓடுவது. அந்த ஓட்டத்தின் காரணமாக கல்லூரியில் இடம் கிடைத்து அமெரிக்கன் ஃபுட்பால் குழுவில் சேர்ந்து வெற்றி பெற்று அமெரிக்கா ஜனாதிபதியை சந்திப்பது.
படிப்பை முடித்து ராணுவத்தில் சேர்ந்து வியட்நாம் போரில் பங்கு பெற்று இறுதியில் அமெரிக்கா ஜனாதிபதியிடம் விருது பெறுவது.
போரில் இறந்த நண்பனின் ஆசையை நிறைவேற்ற மீன்பிடி படகு வாங்கி அதில் நல்ல லாபம் பார்த்தது. சம்பாதித்த பணம் அனைத்தையும் இறந்த நண்பனின் குடும்பத்திற்கு வழங்கியது.
இதற்கு நடுவில் அம்மா இறந்தது, பிரிந்த நண்பியை கண்டு பிடித்தது என் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்.
படம் முழுவதும் ஃபாரஸ்ட் கம்ப்பாக வாழ்ந்திருப்பார் டாம் ஹேங்க்ஸ். இயக்கியவர் ராபர்ட் ஜெமிக்ஸ் .
சிறந்த நடிகர், இயக்குனர் என பல ஆஸ்கர் விருதுகளை குவித்தது இந்த படம்.
இப்படம் பார்க்கும் போது அழுகை, சிரிப்பு, கோபம் என அனைத்தும் உணர்ச்சிகளும் பார்ப்பவர்களுக்கும் வரும். 
Watch Trailer: 
இந்த படத்தின் டவுன்லோட் லிங்க் வேண்டும் என்பவர்கள் தொடர்பு கொள்ளவும். Twitter, Facebook என ஏதாவது ஒன்றில் இருந்து Direct Message அனுப்பவும். 

1 thought on “ஃபாரஸ்ட் கம்ப் (Forrest Gump )”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Minari – மினாரி – 2021Minari – மினாரி – 2021

Minari  Tamil Review- மினாரி – 2021 இந்த வருடம் ஆஸ்கார் விருது (சிறந்த துணை நடிகைக்கான) வாங்கிய திரைப்படம் .  அமெரிக்க திரைப்படம் என்றாலும் கொரிய குடும்பத்தை பற்றிய படம் என்பதால் பெரும்பாலும் கொரிய மொழி பேசப்படுகிறது.  படத்தின் கதை

What’s on your watchlist for this weekend?What’s on your watchlist for this weekend?

Movie Recommendation – Feel Good Movies சில திரைப்படங்கள் மிகவும் ஜாலியாக செல்லும். படத்தின் முடிவு சில சமயம் எதிர்மறையாக இருந்தாலும் ஒரு நல்ல திரைப்படம் பார்த்த உணர்வு ஏற்படும். இந்த பதிவில் அது போன்ற ஃபீல் குட் திரைப்படங்கள்

Sex Education- 2019Sex Education- 2019

செக்ஸ் எஜுகேஷன்(Sex Education Tamil Review ) – 2019 ஓட்டிஸ் (Otis) உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவன். அவனுடைய அம்மா(ஜீன்) அந்த ஊரில்  பெயர் பெற்ற பாலியல் ஆலோசகர் (Sex Counsellor) . பாலியல் ஆலோசகர் என்பதால் பாலியல் தொடர்பான