சில்ரன் ஆஃப் மென் (Children Of Men)

சில்ரன் ஆஃப் மென் (Children Of Men) – 2006 

(spoilers Ahead)
இது ஒரு சுவாரஸ்யமான Science Fiction திரைப்படம்.  
2027 ல் நடக்கும் கதை. உலகத்தில் உள்ள அனைத்து பெண்களும் கருவுறும் திறனை இழந்து விடுகிறார்கள். அதனால் ஏற்பட்ட குழப்பத்தில் உலகம் மொத்தமும் பெரும் அழிவை சந்திக்கிறது. உலகத்தில் கடைசியாக குழந்தை பிறந்து 18 வருடங்கள் ஆகிறது.  உலகத்தின் இளமையானவனை ஆட்டோ கிராப் போடவில்லை என்று ஒருவன் கொன்று விடுகிறான். 
சில்ரன் ஆஃப் மென் திரைப்பட விமர்சனம் தமிழில் ,  Children Of Men movie review in tamil , Clive Owen, Julianne Moore, Michael Caine , Chiwetel Ejiofor
இந்த நிலையில் பிரிட்டன் தனது நாட்டில் உள்ள அனைத்து ‌வெளிநாட்டவரையும் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என அறிவித்து நாடு கடத்த தயாராகிறது. 
தியோ(கிளைவ் ஓவன்)  என்பவன் ஒரு காஃபி ஷாப்பில் இருந்து வெளியே கிளம்புகிறான். சற்று நேரத்தில் காஃபி ஷாப் வெடித்து சிதறுகிறது. இந்த குண்டு வெடிப்புக்கு காரணம் ஃபிஷ்ஷஸ் எனும் தீவிரவாத அமைப்பு என சொல்லப்படுகிறது. 
அடுத்த நாள் தியோ ஃபிஷ்ஷஸ் அமைப்பால் கடத்தப்பட்டு அதன் தலைவி ஜூலியனை (ஜுலியன் மூர்)  சந்திக்கிறான். தியோ வின் மனைவி ஜூலியன் என்றும் அவர்கள் கடைசியாக சந்தித்தது 20 வருடங்கள் முன்பு என தெரிய வருகிறது. 
தியோ வின் நண்பன் வழியாக ஒரு அகதி பெண்ணுக்கு பயண அனுமதி பெற்று தருமாறு கேட்கிறாள். அவனும் அதை வாங்கி தருகிறான். 
பின்னர் அந்த பெண்ணை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சேர்க்க உள்ள உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறாள். 
தியொ, ஜூலியன், லுயுக்(ஜூலியன் அமைப்பை சேர்ந்தவன், கே (அகதி பெண்)  மற்றும் அவளுக்கு உதவி செய்யும் பெண் என அனைவரும் அப்பெண்ணை பாதுகாப்பான இடத்தில் சேர்க்க ஒரு காரில் கிளப்புகிறார்கள்.
போகும் வழியில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்படுகிறார்கள் இதில் ஜூலியன் இறந்து விடுகிறார்.  அதிலிருந்து தப்பி ஒரு பாதுகாப்பான இடத்தை அடைகிறார்கள். 
தான் எட்டு மாத கர்ப்பிணி என்ற தகவலை தியோவிடம் சொல்கிறார் கே. 
ஃபிஷ்ஷஸ் அமைப்பு மற்றும் பிரிட்டன் அரசு நிறுவனங்கள் அரசியல் காரணமாக கே மற்றும் குழந்தையை கைப்பற்ற முயற்சி செய்வதை தெரிந்து கொண்ட தியோ இரண்டு பெண்களுடன் அங்கிருந்து தப்பித்து செல்கின்றான்.
நண்பரான ஜாஸ்பர் (மைக்கேல் கெய்ன்)வீட்டிற்கு அனைவரும் செல்கின்றனர். மனித குலத்தை சரி செய்ய ஒரு விஞ்ஞானிகள் குழு முயற்சி செய்து வருகிறது என்றும் . அந்த விஞ்ஞானிகள் குழு தற்போது டுமாரோ என்ற கப்பலில் உள்ளனர் என்கிறார்.
அவருடைய தொடர்புகளை பயன்படுத்தி அக்கப்பல் இருக்கும் இடத்தை அறிந்து அங்கு போக சொல்கிறார்.
இந்நிலையில் ஃபிஷ்ஷஸ் குழு இவர்களை மோப்பம் பிடித்து வந்து விடுகிறது.
இவர்களிடம் இருந்து தப்பி பல தடைகளை கடந்து விஞ்ஞானிகள் உள்ள கப்பலில் அந்த பெண்ணை சேர்த்தானா என்பது மீதி திரைப்படம். 
அருமையான திரைக்கதை, ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்து செல்லும் கதை பின்னர் பரபரவென்று நகர்கிறது. 
மிகச்சிறந்த ஒளிப்பதிவு, ஒரு காட்சியில் ரத்தத்தை கேமிராவின் மீது தெரிக்க விடும் காட்சி சிறப்பு. 
அல்போன்சா குரன் அருமையாக இயக்கி உள்ளார். 
கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். 
நெட்ஃபிளிக்ஸ்ல் உள்ளது – https://www.netflix.com/title/70044903?s=a&trkid=13747225&t=cp
.
Watch Trailer: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ஃப்ரின்ஜ் (Fringe)ஃப்ரின்ஜ் (Fringe)

ஃப்ரின்ஜ் (Fringe) Series Review In Tamil   இது ஒரு ‌மர்மம் மற்றும் அறிவியல் கலந்த மிகப்பெரிய தொடர்…. மொத்தமாக 100 எபிசோட்கள் 5 சீசன்களாக பிரிக்கப்பட்டுள்ளது. Lost தொடர் புகழ் J.J. Abrams அவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த தொடரின் நீளம்

m3gan – 2022m3gan – 2022

m3gan Tamil Review  ⭐⭐⭐.5/5  #scifi #horror #Tamil ❌ – வில்லன் சிட்டி ரோபோட்டின் குட்டி வெர்சன் – மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் படி குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ரோபோ‌ பொம்மை உருவாக்கியவர்களை கொல்ல முயற்சி செய்கிறது – எளிமையான

டிஸ்ட்ரிக் 9 – District 9 (2009)டிஸ்ட்ரிக் 9 – District 9 (2009)

டிஸ்ட்ரிக் 9 – District 9 (2009) இது ஒரு வித்தியாசமான அறிவியல் புனைவு ஏலியன் திரைப்படம்.  இது மற்ற ஏலியன் படங்கள் போல இல்லாமல் மிக  புதுமையான கதையம்சம் கொண்ட திரைப்படம். படம் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் நகரில் நடக்கிறது.