25 Years of ஸ்பீட் (Speed) -1994

ஸ்பீட் (Speed) Tamil Review 

இன்று இத்திரைப்படம் வெளிவந்தது 25 ஆண்டுகள் முடிந்தது விட்டது. .
 எனக்கு விருப்பமான ஆக்சன்/திரில்லர் பட தொகுப்பில் இந்த படத்திற்கு தனி இடம் உண்டு. எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் இந்த படத்தை பார்த்து விடுவேன்.
படத்தின் பெயரை ‌போலவே படமும் செம ஸ்பீடு…
Speed movie review in Tamil ,Keanu Reeves, Sandra Bullock, 25 years of speed movie,

படத்தின் ஆரம்பத்தில் வில்லன் லிஃப்ட்டில் வெடிகுண்டு வைத்து விடுகிறான்.‌ 3.7 மில்லியன் பிணை தொகையாக கேட்கிறான். கதையின் நாயகன் கீனு ரீவ்ஸ் போலீஸ் அதிகாரியாக அங்கு வருகிறான். நாயகனின் முயற்சியால் லிஃப்டில் இருந்த பல அனைவரும் காப்பாற்ற படுகின்றனர். வில்லன் மயிரிழையில் தப்பித்து விடுகிறான்.
வீரச்செயலுக்கு பாராட்டுகளுடன் பதவி உயர்வு கிடைக்கிறது. நன்றாக போய்க்கொண்டு இருக்கும் வேளையில் ஒரு ஃபோன் அழைப்பு வருகிறது.
முதல் காட்சியின் முடிவில் தப்பித்த வில்லன் மறுமுனையில் பேசுகிறான்.
பஸ் ஒன்றில் வெடிகுண்டு வைத்து உள்ளதாகவும் பஸ்ஸின் வேகம் 50 மைல்களை கடக்கும் போது பாம் உயிர் பெறும் என்றும். வேகம் 50 மைலுக்கு கீழே சென்றால் பாம் வெடிக்கும் என்கிறான். பஸ்ஸிலிருந்து யாரையாவது வெளியேற்ற முயற்சி செய்தாலும் வெடிக்க வைத்து விடுவேன் என்கிறான். மறுபடியும் பிணை தொகையாக அதே 3.7 மில்லியன் கேட்கிறான்.
பஸ் ஓட்டுனரை தொடர்பு கொள்ள இயலாததால் பேருந்தை விரட்டி பிடித்து காரிலிருந்து ஒடும் பேருந்தில் ஏறி பயணிகளுக்கு நிலைமையை சொல்கிறார். இந்த நிலையில் பேருந்து வேகம் 50 மைல்களை கடந்து பாம் உயிர் பெறுகிறது.. அப்போது நடக்கும் கைகலப்பில் ஓட்டுனர் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயம் அடைகிறார். பேருந்தின் வேகம் குறைந்து 50 மைல்களை நெருங்குகிறது. இந்நிலையில் பஸ்ஸில் பயணிக்கும் நம்ம நாயகி (சான்ட்ரா புல்லக்) வந்து ஸ்டியரிங்கை பிடிக்கிறார்.
பேருந்தின் வேகத்தை 50 மைல்களுக்கு மேல் வைத்து எவ்வாறு ஊருக்குள் பயணித்தனர், வில்லன் கண்ணில் மண்ணைத் தூவி பயணிகளை காப்பாற்றினார்களா.. வில்லன் பிடிபட்டானா என அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்வது தான் ஸ்பீட் திரைப்படம்.
படம் ஆரம்பம் முதலே படு வேகமாக செல்கிறது. ‌ வில்லன் பேருந்தில் பாம் வைத்த பிறகு படம் டாப் கியரில் எகிறுகிறது.
நமது இதய துடிப்பை எகிற வைக்கும் காட்சிகள் பல உள்ளன. உதாரணமாக 50 அடி இடைவெளி உள்ள பாலத்தை பேருந்து தாண்டுவது, ஓடும் பேருந்தின் அடியில் நாயகன் பாமை செயல் இழக்க வைக்க முயற்சி செய்வது என சொல்லிக் கொண்டே போகலாம்.
நாயகன் , நாயகி இடையே பிரமாதமான கெமிஸ்ட்ரி .. நாயகன் மற்றும் நாயகி இன்னும் இளமையாகவே இருக்கின்றனர். மெட்ரிக்ஸ் பட நாயகன் மற்றும் கிராவிடி பட நாயகி இருவரும் இணைந்து 1994 ல் நடித்த படம் தான் இது.
திரில்லர் ஆக்சன் பட வகைகளில் ‌முன்னோடி எனலாம் இத்திரைப்படத்தை. இதற்கு பின் பல‌ ஆக்சன் படங்கள் வந்திருக்கும் ஆனால் ரசிகர்கள் மனதில் தனி இடத்தை வகிக்கிறது இத்திரைப்படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Crow – 1994The Crow – 1994

ஹீரோ மற்றும் அவரின் காதலியை கொன்றவர்களை ஹீரோ மறுபடியும் உயிர் பிழைத்து வந்து பழிவாங்கும் Fantasy கதை தான்‌ இந்த படம். IMDb  7.5 Tamil dub ❌ OTT ❌ IMDb user and critics rating ல எதுக்கு

The Gray Man – 2022The Gray Man – 2022

The Gray Man – 2022 – Movie Review In Tamil  CIA வின் சட்டத்துக்கு புறம்பான செயல்கள் பற்றிய வீடியோ ஹீரோட்ட மாட்டுது. அது கைப்பற்ற CIA பண்ணும் வேலைகள் மற்றும் அதனை ஹீரோ எப்படி சமாளித்தார் என்பதை

Dune – 2021Dune – 2021

இயக்குனர் Denis Villeneuve குறிப்பிட்டு சொல்லக்கூடிய இயக்குனர்களில் ஒருவர்.  இவரது படங்களான Arrival, Sicario, Prisoners etc., எல்லாம் வேற லெவலில் இருக்கும்.  IMDb 8.3 தமிழ் டப் இப்போதைக்கு இல்லை.  இந்த படம் ஒரு Sci Fi, Adventure படம்.