பர்சன் ஆஃப் இன்ரஸ்ட் (Person Of Interest)

பர்சன் ஆஃப் இன்ரஸ்ட் (Person Of Interest) Review In Tamil 

க்ரைம் வகையை சேர்ந்த தொடர்களில் எனக்கு பிடித்ததில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 
முதல் இடத்தில் The Mentalist
IMDb 8.5 
5 Seasons , 103 Episodes
பர்சன் ஆஃப் இன்ரஸ்ட் விமர்சனம் தமிழில்,  Person Of Interest review in Tamil, Amazon prime , அமேசான் ப்ரைமில் உள்ளது , Jim Caviezel, Michael Emerson

ஒரு பணக்கார சாஃப்ட்வேர் (Herold Finch)இன்ஜினியர் ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டம்‌ உருவாக்குகிறார். இது உலகத்தில் உள்ள CCTV கேமராக்கள், தொலைபேசி உரையாடல்கள், SMS என அனைத்து வகையான தகவல் பரிமாற்றத்தையும் ஆராய்ந்து தீவிரவாத நடவடிக்கைகளை முன்கூட்டியே அரசுக்கு தெரிவிக்கும் ஆற்றல் படைத்தது.
இது நாட்டில் நடக்க இருக்கும் வன்முறை சம்பவங்கள் குறித்து தகவல் தரும் ஆற்றல் பெற்றது ஆனால் அரசு தீவிரவாத நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.
அதனால் Herold Finch (Michael Emerson)  அந்த சிஸ்டத்தில் சின்ன மாற்றம் செய்கிறார் . குற்ற செயல்களில் தொடர்புடையவரகளின் Social Security number ஐ அவருக்கு மட்டும் அனுப்புமாறு செய்து விடுகிறார். அது குற்றம் செய்ய போறவராக ‌இருக்கலாம் அல்லது பாதிக்கப்பட வாய்ப்பு உள்ள நபராக இருக்கலாம்.
Ex CIA ஏஜன்ட் (John Reese) கதாபாத்திரத்தில் (Jim Cavizel) Herold Finch டம் வேலைக்கு சேருகிறார்.இருவரும் இணைந்து குற்றம் நடக்கும் முன் மககளை காப்பாற்றுகிறார்கள்.
இதற்கு நடுவில் அரசாங்கம், காவல் துறை, சிஸ்டத்தை அடைய நினைக்கும் வில்லன் கோஷ்டி, இதை விட சக்தி வாய்ந்த சமாரிடன் சிஸ்டம்  என பரபரப்புக்கு பஞ்சமில்லாத தொடர்.
ரூட் (root) கதாபாத்திரம் சிறப்பான ஒன்று. வில்லியாக அறிமுகமாகி‌ பின்னர் மனது மாறி நல்லது செய்யும் கூட்டத்தில் சேர்கிறார்..
சமீன் கதாபாத்திரம்  முக்கியமான மற்றும் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. 
சுவாரஸ்யமான பல காட்சிகள் உள்ளன எடுத்துக்காட்டாக வில்லன் கோஷ்டி எல்லாரையும் சிறை பிடித்து நாற்காலியில் கட்டி வைத்து மிரட்டும் போது எவ்வாறு தப்பிப்பார்கள் என யோசிக்கும்போது இவர்களை பழைய Fax மெஷின் மூலம் சிஸ்டம் காப்பாற்றுவது எதிர்பாராத ஒன்று. 
கண்டிப்பாக பார்க்க வேண்டிய தொடர்களில் இதற்கு கண்டிப்பாக ‌இடம் உண்டு.
இந்த தொடர் உருவாக்கத்தில் Jonathan Nolan (நோலன் சகோதரர்களில் ஒருவர்) முக்கியமான பங்காற்றி உள்ளார்.
Watch Trailer: 

Directors: Chris Fisher, Richard J. Lewis, Frederick E.O. Toye, Jeffrey G. Hunt, Stephen Surjik
Writer: Jonathan Nolan
Starring: Jim Caviezel, Michael Emerson, Kevin 
Chapman, Amy Acker, Taraji P. Henson
Producers: Jonathan Nolan, J.J. Abrams, Bryan Burk

2 thoughts on “பர்சன் ஆஃப் இன்ரஸ்ட் (Person Of Interest)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

தி பிளாக் லிஸ்ட் ( The Blacklist )தி பிளாக் லிஸ்ட் ( The Blacklist )

தி பிளாக் லிஸ்ட் (The Blacklist)  இது ஒரு க்ரைம் த்ரில்லர் சீரிஸ். முதல் எபிசோட் ஆரம்பமே அதிரடியாக இருந்தது. அப்பொழுதே அனைத்து சீசன்களையும பார்ப்பது என்று முடிவு செய்து விட்டேன். மொத்தம் 9 சீசன்கள் ஒவ்வொரு சீசனுக்கும் சுமாராக 20

The Loved Ones – 2009The Loved Ones – 2009

The Loved Ones Tamil Review  இத ஒரு ரொமாண்டிக் கொடூர சைக்கோ ஹாரர் படம்னு சொல்லலாம் 🤪 படம் பேர் ஏதோ குடும்ப படம் மாதிரி  வைச்சுக்கிட்டு கொடூரமா படத்தை எடுத்து வைச்சுருக்கானுக.  ஹீரோ ஒரு காலேஜ் பையன் ..

No escape – நோ எஸ்கேப் – 2015No escape – நோ எஸ்கேப் – 2015

 2015 – ல் வெளிவந்த ஆக்ஷன் திரில்லர் படம் தான் நோ எஸ்கேப்.  படத்தின் ஹீரோவாக Jack கதாபாத்திரத்தில் Owen Wilson  ( Behind enemy lines , Shanghai Noon ) நடித்து உள்ளார். எனக்கு மிகவும் பிடித்த ஜேம்ஸ்