தி வெய்லிங் (The Wailing)
இது ஒரு புதுமையான கொரியன் திகில் படம். யார் பேய் என்பதை கடைசி வரை மர்மமாகவே வைத்திருப்பார் இயக்குனர். படம் முழுக்க சின்ன சின்ன தகவல்கள் ஆங்காங்கே யார் பேய் என்பதை யூகிப்பதற்கு சிதற விட்டு இருப்பார் .
சரி படத்தை பற்றி பார்ப்போம்…
ஒரு அழகான மலை கிராமம் அங்கு புதிதாக ஜப்பானியர் ஒருவர் வருகிறார். ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார்.
ஒருக்குள் ஒரு வித நோய் பரவுகிறது. நோய் தாக்கியவர்கள் மூர்க்கத்தனமாக குடும்பத்தினரை தாக்கி கொலை செய்து விடுகின்றனர்.
ஒரு போலிஸ் அதிகாரி இதை விசாரணை செய்கிறார். ஒரு குடும்பம் இறந்த வீட்டில் மர்மமான பெண்ணை சந்திக்கிறார். ஊரில் நடக்கும் துஷ்ட சம்பவங்களுக்கு அந்த ஜப்பானியர் தான் காரணம் என்கிறார் அந்த மர்ம பெண்.
மொழிபெயர்ப்பாளர் மற்றும் சக அதிகாரி உதவியுடன் ஜப்பானியரை விசாரணை நடத்த செல்கிறார் அந்த போலீஸ் அதிகாரி. ஜப்பானியர் வாயைத் திறக்க மறுக்கிறார். ஆனால் அவர் வீட்டில் இறந்தவர்கள் மற்றும் அவர்களின் புகைப்படங்கள் கிடைக்கிறது. அதோடு போலீஸ் அதிகாரி மகளின் மிதியடி அந்த வீட்டில் கிடைக்கிறது.
சில நாட்களில் போலீஸ் அதிகாரியின் மகளை அந்த நோய் தாக்க தொடங்குகிறது.
போலீஸ் அதிகாரியின் மாமியார் ஒரு மந்திரவாதியை ஏற்பாடு செய்கிறார். அவர் செய்யும் பூஜையின் போது மகள் வலியில் துடிக்க பாதியில் பூஜையை நிறுத்தி விடுகிறார். அதே நேரத்தில் அந்த ஜப்பானியரும் பூஜை செய்கிறார்.
கோபமடைந்த போலீஸ் அதிகாரி அடுத்த நாள் ஒரு சிறிய படையை திரட்டி கொண்டு ஜப்பானியரை கொல்ல கிளம்புகிறார். இவர்களிடம் இருந்து தப்பிக்கும் ஜப்பானியர் துரதிர்ஷ்டவசமாக இவர்கள் வாகனத்திலேயே அடிபட்டு விடுகிறார். போலீஸ் அதிகாரி மற்றும் அவர் நண்பர்கள் ஜப்பானியர் உடலை மலையின் உச்சியில் இருந்து தள்ளி விட்டு செல்கின்றனர். இதை தொலைவில் இருந்து அந்த மர்ம பெண் பார்த்து கொண்டு இருக்கிறாள்.
இதற்கு இடையில் மந்திரவாதி அந்த மர்ம பெண்ணை எதிர்பாராத விதமாக சந்திக்கிறார். கொஞ்ச நேரத்தில் இரத்த வாந்தி எடுத்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கிறான்.
அதோடு போலீஸ் அதிகாரிகளுக்கு ஃபோன் செய்து அந்த மர்ம பெண் தான் பேய் என்று சொல்கிறான்.
போலீஸ் மகளை காப்பாற்ற வீடு நோக்கி விரைகிறார். வீட்டிற்கு அருகில் அந்த மர்ம பெண்ணை சந்திக்கிறார். பேயை சிக்க வைக்க பொறி வைத்து உள்ளதாகவும் அவன் வீட்டிற்குச் சென்றால் குடும்பத்தினரை காப்பாற்ற முடியாது என்று சொல்கிறாள் . ஆனால் மந்திரவாதியோ ஃபோன் செய்து அவளை நம்ப வேண்டாம் என்கிறான்.
குழப்பமான போலீஸ் தன் குடும்பத்தை காப்பாற்ற வீட்டிற்குள் நுழைகிறார். அவன் மகள் அதற்குள் குடும்பத்தினரை கொன்று இவனையும் குத்தி விடுகிறாள். அவன் மகளுடன் கழித்த மகிழ்ச்சியான தருணங்களை நினைத்தபடி உயிர் பிரிகிறது.
கடைசி காட்சியில் மந்திரவாதி போலீஸ் வீட்டிற்கு வந்து புகைப்படங்கள் எடுத்து விட்டு செல்கிறான். அச்சமயம் ஒரு பெட்டியை தவறுதலாக விட்டு செல்கிறான். அப்பெட்டியில் நிறைய புகைப்படங்கள் உள்ளது. அதோடு படம் முடிகிறது.
இரத்தம், சதை தெரிக்க ஆக்ரோஷ கூச்சல் கலந்த திகில் படங்களையே பார்த்து பழகிய எனக்கு இது புது அனுபவமாக இருந்தது. யார் பேய் என்பதை கடைசி வரைக்கும் இலை மறை காயாக வைத்து பார்க்கும் ரசிகர்களின் யூகத்தில் விட்டு விடுவது இயக்குனரின் புத்திக்கூர்மையை காட்டுகிறது.
இந்த இயக்குனரின் மற்ற படங்களையும் பார்க்க ஆவலாக உள்ளேன்.
திகில் பட ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.
Today, i watched and its good not boring
This is not a racy movie.. it's new attempt.. lot of small details will be there… Try some other Korean films..
Who is the villain?
Manthravathi? Mystery woman? Or Japanese?
Read this explanation thread:
https://twitter.com/tamilhollywood2/status/1469338960346288129?t=RAkUArjkMnt5mVWSdYFNIQ&s=19